இந்தியா பாளையங்கோட்டை பகுதியில் இரட்டை குழந்தைகள் இரண்டு மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை உண்டுள்ளனர். அதனை அவரது தாயார் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குழந்தைகள் இருவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது, குழந்தைகளின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் இறந்த நிலையில் தாயின் பராமரிப்பிலேயே குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளனர்.
நேற்றிரவு குழந்தைகள் 2 பேரையும் தாயார் தூங்க வைத்தபோது, அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு உடனடியாக குழந்தைகள் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்குள்ள குழந்தைகள் வார்டில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் 2 பேரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.