பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கி உள்ளனர். கால்பந்து விளையாடிவிட்டு உணவருந்த சென்ற மாணவனை பாடகர் மனோவின் மகன்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அவர்கள் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மனோவின் மகன்களின் நண்பர்களை 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.