நான்காவது முறையாகவும் இடம்பெறும் தெற்காசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இலங்கை வீர வீராங்கணைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய 3 தங்கப்பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை அவர்கள் வென்றுள்ளனர். இந்தியாவின் சென்னை நகரில் போட்டிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகின.
இலங்கை சார்பில் தருஷி அபிஷேகா 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் சங்சலா ஹிமாஷினீ வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சவிந்து அவிஷ்க தங்கப்பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மெரோன் விஜேசிங்க தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டியில் தினெத் இதுவர வெள்ளிப்பதக்கம் வென்றார்.