ஸ்ரீலங்கன் விமான சேவையின் Colors of Jaffna மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கு சர்வதேச விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
அண்மையில் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இடம்பெற்ற pacific Asia travel Association விருது விழாவில் ஸ்ரீலங்கன் விமான சேவை தங்க விருதைப் பெற்றது. நாட்டின் வட மாகாணத்தை இலக்காக கொண்டு விமான சேவை நிறுவனம் முன்னெடுத்த முன்னணி சர்வதேச சந்தைப்படுத்தல் வேலைத்திட்டமாக Colors of Jaffna வேலைத்திட்டம் அமையப்பெற்றது.
ஆசியாவின் அவதானத்திற்குரிய இடமாக யாழ்ப்பாண நகரம் கருதப்படுகிறது. உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் விருதுக்கென விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.