மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் நால்வர் மயக்கமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிருந்து உறவினர் ஒருவர் கொண்டு வந்த மதுபானத்தை வீட்டாருக்கு தெரியாமல், மாணவர் ஒருவர் எடுத்து அதனை பாடசாலைக்கு கொண்டு சென்று தனது நண்பர்களுடன் அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாடசாலையின் பின்னர் மேலதிக வகுப்பிற்கு சென்றுவிட்டு வரும் போது மாணவர்கள் மதுபானத்தை அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் மாணவர்கள் நால்வரும் வாந்தி எடுத்துள்ளதுடன் அவர்கள் வீதியோரத்தில் மயக்கமுற்றுள்ளனர்.
இதில் ஒரு மாணவரை அடையாளம் கண்டு கொண்ட அந்த பக்கமாக வந்த நபர் ஒருவர் மாணவரின் தந்தைக்கு அழைப்பை ஏற்படுத்தி இதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்தே மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.