பாதுக்கை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பாதுக்கை துத்திரிபிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியுடன் பஸ் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி உட்பட அதில் பயணித்த ஒருவர் பாதுகாக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பயணித்த 61 வயதுடைய பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.