எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹத்வெனி பெய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். 323879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அவர்களுக்கென 2849 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் பரீட்சை வினாத்தாள்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.