பெரு இராச்சியத்தின் முன்னாள் ஜனாதிபதி எல்பர்டோ புஜிமோரி தனது 86வது வயதில் மரணமடைந்துள்ளார்.
1990 முதல் 2000 ஆண்டு வரை பெருவின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த புஜிமோரி மக்களின் கட்டாயத்தின் பேரில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இடதுசாரி கெரில்லா கிளர்ச்சிக் குழுவிற்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாடு அவர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. எனினும் கிளர்ச்சியாளர்களை அவர் தோற்கடித்த தலைவர் என புஜிமோரியின் ஆதரவாளர்கள் அவரை புகழ்கின்றனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த புஜிமோரியின் மரணம் குறித்து அவரது மகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாக்கு புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.