ஆசிய கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 3வது சுற்றில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி நேற்றிரவு தாயகம் வந்தடைந்தது.
இலங்கை மற்றும் கம்போடியா அணிகளுக்கிடையில் கடந்த 5ம் திகதி கொழும்பில் கம்போடியாவுடன் இடம்பெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மற்றுமொரு போட்டி கம்போடியாவில் கடந்த 10ம் திகதி இடம்பெற்றது.
2 – 2 என போட்டி சமநிலையில் காணப்பட்ட போது அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பெனால்ட்டி சந்தர்ப்பத்தில் இலங்கை அணி 4 – 2 என முன்னிலை வகித்து போட்டியில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் தேசிய கால்பந்தாட்ட அணி நேற்றிரவு சிங்கப்பூர் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.