சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்கென இன்றைய தினம் விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு Open Visit என்ற பெயரில் சிறைக்கைதிகள் திணைக்களம் இந்த விசேட தினத்தை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிட வருகை தருபவர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்படும்.
சுகாதார வழிகாட்டல்களுக்கமைய கைதிகள் பார்வையிடும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.