ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடமபெற்றது. குறித்த தினங்களில் வாக்களிக்க தவறிய அரச ஊழியர்களுக்கு நேற்றும் இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதற்கமைய வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்கள் இன்றைய தினம் தமது வாக்குகளை செலுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது சேவை நிலையத்திலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அவர்கள் வாக்களிக்க முடியும். எவ்வாறெனினும் இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் மூல வாக்களிப்புக்கென விண்ணப்பித்த அரச ஊழியர்கள் வாக்குகளை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.