வடகொரியாவில் 76-வது நிறுவன ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. தலைநகர் பியாங்காங்கில் ராணுவ அணிவகுப்புடன் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் வடகொரியா தலைவர் கிம் ஜங் அன் தலைமையேற்று ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கிம் ஜங் அன், அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார் என பேசினார். அவர் கூறுகையில், “அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது.
இதனால் அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். போரில் அதிகளவிலான அணு ஆயுதங்கள் தேவை இருக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்” என்றார்.