பிலடெல்பியாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:-
டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரை உயர்த்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
நான் நடுத்துர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம்.
டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் இரண்டும் மோசமாக இருந்தது. டிரம்பின் தவறான கொள்கைகளால் சீனா ராணுவம் பலமடைந்துள்ளது. சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார். டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்.
இவ்வாறு டிரம்பிற்கு எதிராக தன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.