பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமபாத் நகரில் கட்சி ஆதரவாளர்கள் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போதே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது.