நாட்டின் 25 மாவட்டங்களிலும் நிதி சார்ந்த நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள தரப்பினரை அதிலிருந்து மீட்பதற்கு அரசாங்கம் நலன்புரி வேலைத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜெனீவாவில் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை தொடர்பிலான அறிக்கையொன்றை முன்வைத்தார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் திருப்தியடைய முடியாதென அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் அறிக்கையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகத்தின் 51ன் கீழ் ஒன்று யோசனையை இலங்கை கடுமையாக நிராகரிப்பதாக ஹிமாலி அருணதிலக இதன்போது தெரிவித்தார். குறித்த தீர்மானம் இலங்கையின் அங்கீகாரம் இன்றி பிளவுபட்ட வாக்குகள் ஊடாக நிறைவேற்றப்பட்ட ஒன்றென அவர் சுட்டிக்காட்டினார்.