தனது அரசாங்கத்தில் எந்தவொரு வகையிலும் அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாதென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி விவசாயிகளை பலப்படுத்தும் அரசாங்கம் உருவாக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செழிப்பான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் அனுர குமார திஸாநாயக்க மக்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் பிரச்சார கூட்டங்களில் ஒன்று பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இடம்பெற்றது.