டுபாய் இளவரசியான ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீட் அல் மக்தூம் கடந்த ஜூலை மாதம் தனது விவாகரத்தை அறிவித்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் தனது விவாகரத்து குறித்து அவர் தனது கணவருக்கு பதிவொன்றை வெளியிட்டிருந்தார். ‘அன்புள்ள கணவரே எப்போதும் உங்களின் மற்ற தோழிகளுடன் தான் இருக்கிறீர்கள் என்பதால் நான் உங்களை விவகாரத்து செய்கிறேன்.. நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்.. விவாகரத்து செய்கிறேன்.. இப்படிக்கு முன்னாள் மனைவி’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் விவாகரத்து குறித்து இளவரசி ஷேக்கா மீண்டும் இன்ஸ்ட்கிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இது உண்மையில் அவரது வியாபாரம் தொடர்பானது.
தனது வாசனைத் திரவிய நிறுவனத்தில் புதிய வாசனைத் திரவியமொன்றை அவர் அறிமுகம் செய்துள்ளார். குறித்த புதிய தயாரிப்புக்கு DIVORCE என அவர் பெயரிட்டுள்ளார்.
M1 என்ற பெயரில் வாசனைத் திரவிய தயாரிப்புகளை வெளியிட்டு வரும் இளவரசி ஷேக்கா அண்மையில் வெளியிட்ட புதிய தயாரிப்புக்கு டிவோர்ஸ்; என பெயரிட்டுள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது சந்தையிலும் அதிக கேள்விக்குரிய தயாரிப்பாக மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தயாரிப்புக்கான டீசர் வெளியான நிலையில் அதுவும் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது.