அனைத்து பல்கலைக்கழக மாணவர் படையணியின் ஏற்ப்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே அவர் கைதானார்.
தேசிய கல்வி கொள்கை கட்டமைப்பு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.