இலங்கை சிறுவர்களிடம் அதிகரிக்கும் குறைபோஷாக்கு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை அண்மையில் சபையில் முன்வைக்கப்பட்டது.
நிறைக்குறைவு, குறைந்த உயரம், வறட்சி, நுண் ஊட்டச்சத்து குறைபாடு, முக்கியமான விட்டமின் மற்றும் கனிமங்களின் குறைபாடு போன்ற காரணங்களினால் சிறுவர் குறைபோஷாக்கு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2500 கிராம் அல்லது அதற்கும் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் நிறைக் குறைவான குழந்தைகளாக கருதப்படும். 2022ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய போஷாக்கு மற்றும் நுண் ஊட்டச்சத்து ஆய்வுக்கமைய நிறைக் குறைவு பிறப்பு வீதம் 15.9ஆக காணப்பட்டது.
2023 ஜூன் மாத போஷாக்கு மதிப்பீடுகளுக்கமைய 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிசுக்கள் மற்றும் 2 வயதிற்கு குறைந்த குழந்தைகள் மத்தியில் நிறைக்குறைவு மற்றும் குறை உயரம் போன்றன அதிகரித்துள்ளன.
நிறைக்குறைவுடன் அதிக பிறப்புவீதம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. அது 24.6 வீதமாக காணப்படுகிறது. நான்கு சிறுவர்களில் ஒருவர் நடுத்தர அல்லது கடுமையான முறையில் நிறைக்குறைவுக்கு உட்படுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஐந்து வயதிற்கு குறைந்த சிறார்களில் 1.2 வீதமானோர் கடும் குறைபோஷாக்கு பிரச்சினைக்கு உட்படுட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்படுகிறது.