கொழும்பிலுள்ள பல ரயில் நிலையங்களை வர்த்தக மத்திய நிலையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமுள்ள வர்த்தக தரப்பினருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டிய, வெள்ளவத்தை, கொம்பனித் தெரு, தெஹிவளை மற்றும் மவுன்ட் லெவினியா உள்ளிட்ட ரயில் நிலையங்களை வர்த்தக மத்திய நிலையங்களாக மாற்றும் திட்டம் தொடர்பிலான யோசனை போக்குவரத்து அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளம் கண்டு தெரிவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.