தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 1350 ரூபாவாகவும் மேலதிக கொழுந்து ஒரு கிலோவுக்கென 50 ரூபாவும் வழங்க இன்று இடம்பெற்ற சம்பள நிர்வாக சபை கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதில் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் மற்றும் முதலாளிமார் உட்பட தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர். இந்த தீர்மானத்தை இன்று முதல் அமுல்படுத்தும் வகையில் வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்
“நாளாந்த வேலையில் EPF மற்றும் ETF உடன் 1552 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற இணப்பாட்டிற்கு நாம் வந்துள்ளோம். அதாவது EPF, ETF இல்லாமல் 1350 ரூபா. எனினும் 1350 ரூபா என்பதற்கான தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான வேலைகளை வழங்க முடியாது. அவர்களின் வேலைப்பளுவை எம்மால் வரையறுக்க முடியாது. அவர்கள் அதிகமாக வேலை செய்தால் அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக அவர்களுக்கு உழகை;க முடியும். அதனை 350 ரூபாவிற்கு மட்டுப்படுத்த எம்மால் முடியாது”.