2023ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய விடைத்தாள் திருத்தப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.