அதிகாரிகளுக்கு அறிவிக்காது ஐந்து நாட்களுக்கும் அதிகமாக சேவைக்கு சமூகமளிக்காவிட்டால் குறித்து ஐந்து தினங்களின் பின்னர் அடுத்த வரும் ஐந்து நாட்களில் சேவையை கைவிட்டுச் சென்றதற்கான அறிவித்தலை வழங்க வேண்டுமென தெரிவித்து அரச சேவைகள் ஆணைக்குழு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரியொருவருக்கு சேவையை விட்டு விலகிச் சென்றதாக அறிவித்தல் விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் விளக்கமளிக்கும் பட்சத்தில் அது அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலக விதிமுறைகளின் 216வது சரத்தின் ஏற்பாடுகளுக்கமைய முன்வைக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.