இன்று (10) காலை தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை பகுதியில் கெப் வண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
கெப் வண்டியில் பயணித்த இரண்டு பொறியாளர்கள் மற்றும் சாரதியும் கெப் வாகனத்தை விட்டு வெளியே வந்தவுடன் வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்து காரணமாக கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற வாகனங்கள் சுமார் 15 நிமிடம் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துருகிரிய அதிவேக வீதியின் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.