செயற்கை அறிவு தொழில்நுட்பத்தில் காட்சி விருந்தாக வடிவமைக்கப்பட்ட பர்கர் வடிவ வீடு வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பர்கர் வீடு வெளிப்புற தோற்றத்தில் பார்க்க பிரமாண்டமாக இருக்கிறது . உள்ளே அலங்காரம் முழுவதும் பர்கரால் ஆனது என்பதுதான் வடிவமைப்பாளரின் கற்பனையை அனைவரையும் மெச்ச வைக்கிறது. வரவேற்பு அறையில் அமரும் Sofa, விளக்கு, மேசை , தூண் என அனைத்தும் பர்கர் மயமாக உள்ளது.
இன்னும் உள்ளே சென்றால் பர்கர் சமையலறை, பர்கர் குளியலறை பிரமிக்க வைக்கிறது. குளியல் தொட்டியில் நிரப்பப்பட்ட திரவம் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது பர்கர் தயாரிக்க உதவும் திரவ சீஸ் என்று கூறப்படுகிறது. அதேபோல பர்கர் நீச்சல் குளமும் மனம் மயக்குகிறது.
இன்ஸ்டாகிராமில் வெளியாகி சுமார் 3.3 கோடி பேரின் இதயங்களை கவர்ந்துள்ளது இந்த பர்கர் வீடு. பர்கர் பிரியர்களும், பிரபல உணவு நிறுவனங்களும் பாராட்டி கருத்து பதிவிட்டு உள்ளனர்.