கடந்த மே மாதம் 20 ஆம் திகதி களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் சந்தை வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்களை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நான்கு சந்தேகநபர்களும் தங்களுடைய பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, பின்வரும் சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகரையோ அல்லது களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரையோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் – 071 – 8591691
களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு – 071 – 8594390