ஸ்பெயினில் இடம்பெற்ற 20 வயதிற்கு கீழ்ப்பட்ட மல்யுத்த உலக கிண்ண போட்டிகளில் இலங்கை சார்பில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹிங்சா இன்று தாயகம் திரும்பினார்.
100க்கும் அதிகமான நாடுகளின் வீர வீராங்கணைகளில் இந்த போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர். நேற்றிரவு 8.40 மணியளவில் அபுதாபியலிருந்து ஈ.வை.396 என்ற விமானம் ஊடாக நெத்மி அஹிங்சா நாட்டிற்கு வருகை தந்தார்.