எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்கென எதிர்வரும் 14ம் திகதியை விசேட தினமாக அறிவித்துள்ளதா தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 3ம் திகதி வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பமானது. நேற்றைய தினமும் இதற்கென விசேட தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
14ம் திகதியும் விசேட தினமாக வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.