ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைகள் ஆராயப்பட்டதன் பின்னர் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களை தயார்ப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.