உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேறும் 6 வான்கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார். நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.