நாட்டின் தலைவராக வருபவர் தேசிய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடியவராக இருக்க வேண்டுமென வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான்றி நாட்டின் ஆட்சி கதிரையில் அமருவதற்கு மாத்திரம் கனவு காணும் நோக்கில் வாக்குறுதிகளை வழங்கும் நபர்களால் நாட்டின் தலைவராக முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கந்துருவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். வீழ்ந்திருந்த நாட்டை இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பிய தலைவர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இதனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டுமென வடமத்திய மாகாண முன்னாள் முதலமைசர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.