வெனிசுலாவின் எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முன்டோ கொன்ஷாலேஷ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் ஸ்பெயினிடம் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் அந்நாட்டிற்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெனிசுலாவின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக போராடியவர்களில் எட்முன்டோ முக்கியமானவர்.
இந்நிலையில் அவரை கைதுசெய்யுமாறு வெனிசுலா நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்துள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கரகாஷிலுள்ள ஸ்பெயின் தூதரகத்தில் சில வாரங்கள் மறைந்திருந்த நிலையில் அவர் தற்போது ஸ்பெயினிற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.