இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட 15000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நேற்றைய தினம் வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக 15,491 மில்லியன்ரூபா பெறுதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
385 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 9,631 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் 4860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோ ஐஸ் போதைப்பொருளும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக கேரள கஞ்சா , போதை மாத்திரம் உள்ளிட்டவையும் குறித்த காலப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.