நாட்டில் தற்போது சிலவும் மழையுடன் கூடிய வானிலை எதிர்வரும் சில நாட்களில் அதிகரிக்ககூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடைக்கிடையே இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.