ஒலுவில் பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி அப்பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபரை நேற்று (7) கைது செய்து, அவரிடமிருந்த 58,270 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.