ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 209 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 204 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 02 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஏனைய 03 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 2863 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 2775 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பான 23 முறைப்பாடுகளும்,வேறு முறைப்பாடுகள் 65ம் பதிவாகியுள்ளன.
பெறப்பட்ட முறைப்பாடுகளில் 2113 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.