மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தலத்தின் 70வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் மிக சிறப்பாக நிறைவு பெற்றது.
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்று விளங்கும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னை திருத்தலத்தின் திருவிழா பங்குத்தந்தை அருட்பணி ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் கடந்த மாதம் 30ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
இதேவேளை, இன்றைய தினம் (08) திருவிழா திருப்பலி ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களினால் நடாத்தப்பட்டது. திருப்பலியைத் தொடர்ந்து மரியன்னையின் பிறந்த தினமாகிய இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், அன்னையின் திருச்சுரூப பவனியினை தொடர்ந்து ஆலய முன்றலில் நடைபெற்ற விசேட அன்னையின் திருச்சுரூப ஆசீர்வாதத்துடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.