தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஜக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று (08) தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
இதன்போது உறுப்பினர்களான மனோகனேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதா கிருஷ்ணன், உதயகுமார், நலின் பண்டார முன்னாள் அமைச்சர் சுஜிவ சேனசிங்க உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.