‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியின் மட்டக்களப்பு மாவட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காத்தான்குடி இல் அமைந்துள்ள பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இன்று (08) முற்பகல் விஜயம் செய்தார்.
அங்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தலைவர் அப்துர் ரஊப் மிஸ்பாஹி உட்பட அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா உள்ளிட்ட பலர் இதன்போது இணைந்திருந்தனர்.
விஜயத்தின் போது காத்தான்குடி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.