இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
செப்டெம்பர் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ சீமெந்துக்கான செஸ் வரியை ஒரு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய , ஒரு கிலோ செயற்கை நிறம் அல்லது சாயம் பூசப்படாத வெள்ளை சீமெந்திற்கு ரூ.5 ஆக இருந்த செஸ் வரி ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி ரூ.8ல் இருந்து ரூ.7 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.