வாக்காளர் அட்டையை விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தபால் நிலைய ஊழியர் வைத்தியசாலையில் அனுமதியாகும் படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.