கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்றுள்ளார்.
சம்பவம் நேற்றைய தினம் (08) தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.