26 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 6ஆம் திகதி சென்னையிலிருந்து வணிகப் பயணியாக வந்து பெங்களூர் திரும்புவதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அத்துடன், ஒரு கிலோ 158 கிராம் எடையுள்ள 09 தங்க பிஸ்கட்டுகளும், மேலும் 03 தங்க பிஸ்கட்டுகளும் சந்தேக நபரின் கால்சட்டைப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.