தபால் வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது வாக்குச் சீட்டை கையடக்கத் தொலைபேசியூடாக புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் மூதூர் டிப்போவில் கடமையாற்றும் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த சம்பவம் இடம்பெற்ற தபால் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய டிப்போ உப முகாமையாளரான முகமது அனிபா அன்வர் சதாத் என்பவர் மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்குத் தாக்கல் செய்ய பணிப்புரை கிடைக்கும் வரை சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர் .