விளையாட்டுத் துறையில் நீண்டகால வெற்றிகளைப் பெறுவதற்கு உரிய வேலைத்திட்டங்கள் அவசியமென ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் விளையாட்டுக் கொள்கையை வெளியிடும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார். முன்னணி விளையாட்டு வீரர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.