அரசியல்வாதிகளின் தவறு காரணமாகவே மாற்றமொன்றை கோரி இளைஞர்கள் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். திலித் கமன ஆசன தொகுதி மக்கள் சந்திப்பு எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இப்பொழுது உங்கள் வீடுகள் நிரம்பும் அளவிற்கு கொள்கை பிரகடனங்கள் இருக்கலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை அதன வழங்கினார்கள். நாம் முன்னோக்கிச் செல்வதில்லையா? போவதற்கு வழியும் இல்லையா? இதன் காரணமாகவே இலங்கை இளைஞர்கள் வீதிக்கு இறங்கினர். மாற்றத்தை கோரினார்கள். அதற்கு சர்வதேசத்திற்கு அழுத்தம் இருக்கவில்லையென கூற முடியாது. எனினும் இந்த இளைஞர்கள் இவ்வாறு தூண்டப்படுவதற்கு காரணம் நாட்டிலிருந்த சுயநலமான அரசியல்வாதிகள். அதன் காரணமாகவே நான் கூறுகின்றேன். மாற்றமொன்று தேவையாயின் மாற்றத்திற்குரிய ஒன்று இருக்க வேண்டும். மாற்றமான ஒருவரும் இருக்க வேண்டும். அந்த மாற்றத்தை நீங்கள் உணர வேண்டும்”.