புத்தளம் சேரக்குளி கரையோர பகுதியில் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35470 போதை மாத்திரைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அங்கிருந்து இரு கொள்கலன்களை சோதனையிட்ட போதே இந்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.