தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிப்பதற்கு முயற்சித்து வரும் இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் தமிழில் விருமன் படத்தின் வாயிலாக அறிமுக நடிகையானார்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில பட வாய்ப்புக்கள் அவரை தேடி வந்தன. ‘மாவீரன்’ மற்றும் ‘நேசிப்பாயா’ உள்ளிட்ட படங்களில் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்நிலையில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தமிழ் சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அதிதியின் முதல் தெலுங்கு படமாகும். படத்தை விஜய் கனகமெடலா இயக்குகின்றார்.