ஸ்பெயினில் இடம்பெறும் உலக செம்பியன்ஷிப் கனிஷ்ட மல்யுத்த போட்டிகளில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இலங்கையின் நெத்மி அஹிங்சா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட Valeria Mikitsich யை 6 – 2 என நெத்மி தோற்கடித்தார். மல்யுத்த போட்டி வரலாற்றில் இலங்கை வீராங்கணை ஒருவர் பெற்றுக்கொண்ட உயரிய பதக்கமாக இது கருதப்படுகிறது. நெத்மியின் பிரதான பயிற்சியாளராக சுரங்க குமார செயற்படுகின்றார்.