சீனாவின் ஹயினான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியை யாகி சூறாவளி தாக்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் அதிக கவனத்தை ஈர்த்த ஹயினான் மாநிலத்திலுள்ள சுமார் 4 இலட்சம் பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணியில் சீன மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்தாம் தரத்தைச் சேர்ந்த குறித்த சூறாவளியினால் மணித்தியாலத்திற்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன் 500 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்பு விரிவு தெரிவித்துள்ளது.
யாகி சூறாவளி அபாயம் காரணமாக ஹொங்கொங், மெகாவு மற்றும் குவென்டோங்கின் ஷூஹாய் நகரத்தை இணைக்கும் 55 கிலோமீற்றர் நீளம்கொண்ட பிரதான பாலம் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.